Loading . . .




மூளையில் உள்ள கெட்ட நினைவுகளை மட்டும் நம்மால் அழிக்க முடியுமா?

The Forecast 3 years ago அறிவியல்

நம்முடைய மூளையில் பல்வேறு நினைவுகள் பதிவாகும் நிலையில், அதிலிருந்து கெட்ட நினைவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து நம்மால் நீக்க முடியுமா? பகலில் நடக்கும் பல விஷயங்களை நம் மூளை சேமித்து வைக்கிறது. ஆனால் அதில் பெரும்பாலானவை மறந்துவிடும். எனினும், கெட்ட நினைவுகளைச் சேமிக்க ஒரு குறிப்பிட்ட வசதி உள்ளது. நினைவுகளைச் சேமிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் நிச்சயம் நமக்கு உளவியல்ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், சில மோசமான சூழலில் மன உளைச்சல் சீர்கேட்டையும் ஏற்படுத்தும். அதற்கான காரணம் என்ன?

எதிர்மறை அனுபவங்கள் உணர்ச்சிகளுடன் வலுவான தொடர்பு கொண்டிருப்பதும் இதற்கு முக்கியக் காரணம். உணர்வுகளுடன் இணைக்கப்பட்ட நினைவுகள் நாம் உயிர் வாழ்வதற்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதி, நினைவுகளை அவற்றின் பயன்களின் அடிப்படையில் நம் மூளை வகைப்படுத்திச் சேமிக்கிறது.

நகரத்தின் ஆபத்தான பகுதியைக் கடக்கும்போது நாம் மிகவும் பயந்திருந்தால், அதை மூளை சேமித்து வைக்கும். அதனால் நாம் மீண்டும் பயம் கொள்ளமாட்டோம்.

எதிர்கொள்ளும் சூழல் உண்மையிலேயே அதிர்ச்சிகரமானதாக இருக்கும்போது நிலைமை மேலும் சிக்கலாக இருக்கும். அந்த சந்தர்பத்தில் நம் மூளை அந்த அனுபவங்களை மறைக்க முயலும். ஆனால், கெட்ட நினைவுகள் மீண்டும் எழும்போது சிக்கல் உருவாகிறது

0 Comments

Post your comment here

அறிவியல் Relateted News

Latest News