Loading . . .




தாட்கோ மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்ய மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவில் புதிய உறுப்பினர்களுடன் தேர்வுக்குழு அமைத்தல் ஆணை வெளியிடப்படுகிறது

The Forecast 3 years ago TS. ஜவகர் இ.ஆ.ப.,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துதல் -தாட்கோ மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்ய மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவில் புதிய‌ உறுப்பினர்களுடன் தேர்வுக்குழு அமைத்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

மேலாண்மை இயக்குநர் தாட்கோஅவர்களின் கடிதத்தில், மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையின்வாயிலாக தாட்கோ மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்யும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கீழ்க்கண்ட உறுப்பினர்களை கொண்ட மாவட்ட அளவிலான தேர்வு குழு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து வங்கிக்கு பரிந்துரை செய்கிறது என்றும், மேலும், அரசாணை எண்.49, சிறு குறு மற்றும் நடுத்தர (D2) துறைஇ நாள்.29.10.2012ன்படி மாவட்ட தொழில் மையத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில், பயனாளிகள் தேர்வு குழுவில்அதிக அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பயனாளிகள் பயன்பெறும் வகையில் MSME SC/STசங்கம்சேர்ந்து செயல்பட ஆணையிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

3. மேலும், மேற்படி தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் District MSME SC/ST Association District Chapter of Dalit Indian Chamber of Commerce and Industry (DICCI) or the Entrepreneur Association Representing SC/ST / (MSME SC/ST சங்கம்) இணைந்துபயனாளிகளை தேர்வு செய்வதால், பயானளிகள் கடன் பெற்ற பிறகு தொழில் முன்னேற்றம் அடைய நல்வழி காட்டுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் எதிர்காலத்தில் தொழில் முனைவோர்களாக மேம்படுத்தி தொழில் நுட்ப ரீதியான வழிகாட்டுதல் வழங்குவதற்கும், சந்தை படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்தை முன்னேற்றிட உதவும் என்பதால் தாட்கோ மாவட்ட அளவிலான தேர்வு குழுவில் இனி வருங்காலங்களில் கீழ்கண்டவாறு உறுப்பினர்களை இணைத்து மாவட்ட தேர்வுக் குழு அமைத்திடுமாறும் மேலும், தற்போது SC/ST பயனாளிகளுக்கு பொருளாதார திட்டங்கள் தாமதம் இன்றி செயல்படுத்திட மாவட்ட அளிவிலான தேர்வு குழுவை 15 நாட்களுக்கு ஒரு முறை நேர்காணல் நடத்திட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு வழங்கிடுமாறும் தாட்கோ மேலாண்மை இயக்குநர் அவர்கள் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்:

4. மேலாண்மை இயக்குநர் தாட்கோ அவர்களின் பரிந்துரையை அரசு கவனமுடன் ஆய்வு செய்து தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த தாட்கோ மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் பொருட்டு அவர்களின் தலைமையில் பின்வரும் உறுப்பினர்களை கொண்ட மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவை அமைத்து அரசு ஆணையிடுகிறது:-மேலும், SC/ST பயனாளிகளுக்கு பொருளாதார திட்டங்கள் தாமதம் இன்றி செயல்படுத்திட மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவை 15 நாட்களுக்கு ஒரு முறை நேர்காணல் நடத்திட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு வழங்கி அரசு ஆணையிடுகிறது.

.

0 Comments

Post your comment here

TS. ஜவகர் இ.ஆ.ப., Relateted News