பழங்குடியினர் வருவாய் ஈட்டும் பொருட்டு உன்னிக்குச்சி மூலம் தளவாடப் பொருட்கள் தயாரிக்க ரூ.1.80 கோடி செலவிடப்படும்”
The Forecast 3 years ago TS. ஜவகர் இ.ஆ.ப.,
விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீது மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பாக கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
“பழங்குடியினர் வருவாய் ஈட்டும் பொருட்டு உன்னிக்குச்சி மூலம் தளவாடப் பொருட்கள் தயாரிக்க ரூ.1.80 கோடி செலவிடப்படும்”
“நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் உள்ள உன்னிக்குச்சி செடிகளின் (Lantana Camara) பிரம்பினை பயன்படுத்தி செய்யப்படும் மேசை, நாற்காலி, சோபா உள்ளிட்ட பல்வேறு தளவாடங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இத்தகைய பொருட்களை செய்வதற்கு தகுந்த பயிற்சிகள் அளித்தல், உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் வாங்குதல் சந்தைப்படுத்துதல் ஆகிய பணிகளை உள்ளடக்கிய பணிகளுக்கு
ரூ.1.80 கோடி செலவிடப்படும்”.
2. மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், பழங்குடியின மக்கள் வருமானம் ஈட்டும் வகையிலும், தொடர்ச்சியான வேலை வாய்ப்பை உருவாக்கும் பொருட்டும், உன்னிக்குச்சி மூலம் தளவாடப் பொருட்கள் தயாரிப்பதற்கு, ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.75,00,000/-ம், நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.60,90,000/-ம், ஆக மொத்தம் ரூ.1,35,90,000/-(ரூபாய் ஒரு கோடியே முப்பத்து ஐந்து இலட்சத்து தொண்ணூறாயிரம் மட்டும்) விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.
3. மேற்காணும் உன்னிக்குச்சி மூலம் தளவாடப் பொருட்கள் தயாரிப்பது தொடர்பான நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும் என்றும், இதன் மூலம் சுமார்
310 பழங்குடியின குடும்பங்கள் பயன்பெறுவர் என்றும், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments