பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம் தொழிலாளர் துறை இணை ஆணையர்
தே. விமலநாதன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948-ன்படி உள்ளாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஊதிய விகிதத்தை மறுபரிசீலனை செய்ய தொழிலாளர் இணை ஆணையர் அவர்களின் தலைமையின் கீழ் 10 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இது தொடர்பான பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்கள் கருத்துக்களை கேட்டு பரிசீலனை செய்ய இக்குழுவின் கருத்து கேட்புக் கூட்டம் தொழிலாளர் துறை இணைஆணையர் திரு. தே. விமலநாதன் அவர்கள் தலைமையில் இன்று (10.02.2023)ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து தொழிற்சங்க பிரிதிநிதிகளும், நிரந்தர மற்றும் தினக்கூலி பணியாளர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் தெரிவித்தனர். இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குறைந்தபட்ச ஊதியம் மறுபரிசீலனை செய்யப்படும் என குழு தெரிவித்துள்ளது.
0 Comments