சென்னை வார்டு - 123ல் அமைந்துள்ள நாகேஸ்வரராவ் பூங்காவினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., ஆய்வு
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு - 123ல் அமைந்துள்ளஸநாகேஸ்வரராவ் பூங்காவினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் (12.03.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூங்காவில் பசுமையாகக் காட்சியளித்திடும் வகையில் பல்வகைச் செடிகள் நடுதல், புல்வெளி பரப்பினை அதிகரித்தல், மக்கள் அமர்ந்திட கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்துதல் ஆகியவற்றினை மேற்கொள்ளவும், பூங்காவினை மேலும் சிறப்பாகப் பராமரித்திடவும் அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, முதன்மைச் செயலாளர்/ ஆணையாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி .எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், மத்திய வட்டார துணை ஆணையர் திரு.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள், தலைமைப் பொறியாளர். இராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments