பெருநகர சென்னை மாநகராட்சி அழகுபடுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் (19.03.2023) பார்வையிட்டு ஆய்வு
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், வேளச்சேரி உள்வட்டச் சாலை புழுதிவாக்கம்
எம்.ஆர்.டி.எஸ். பாலங்களின் கீழ் பகுதியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்று, பசுமை புல்வெளி, செடிகள், நடைபாதை அமைத்தல், மின்விளக்கு வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் (19.03.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் .சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், தெற்கு வட்டார துணை ஆணையாளர் திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., அவர்கள், தலைமைப் பொறியாளர் (பொது) .எஸ்.ராஜேந்திரன், மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments