Loading . . .




ஆளும்கட்சி, எதிர்க்கட்சி அமளி நீடிப்பு நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம்

The Forecast 3 years ago உலக செய்திகள்

லண்டன் பேச்சு தொடர்பாக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும்கட்சியும், அதானி  விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. நேற்று காலை மக்களவை கூடியதும் கூட்டுக்குழு விசாரணை கேட்டு காங்கிரஸ் எம்பிகள் கோஷம் எழுப்பினர். அதே சமயம் ஆளும்கட்சி எம்பிக்களும் ராகுல்மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சுமார் 10 நிமிடம் இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவையை ஒழுங்காக நடத்த அனுமதிக்கும்படி சபாநாயகர் ஓம்பிர்லா கேட்டுக்கொண்டார். ஆனாலும் அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் அவை கூடிய போதும் அமளி தொடர்ந்ததால் அவையை மாலை 6 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.   இதே போல் மாநிலங்களவையிலும் அமளி நீடித்தது. அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அவைத்தலைவர் ஜெகதீப் தன்கரிடம் 12 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. அதை தன்கர் நிராகரித்து உத்தரவிட்டார். இதனால் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் அவையை ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினார். மேலும் அம்பேத்கர் சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.

* ரூ.45 லட்சம் கோடியில் பட்ெஜட்  2023-24ம் ஆண்டிற்கான மொத்த செலவீனமான ரூ.45 லட்சம் கோடி ஒன்றிய பட்ஜெட்டுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் ஆண்டிற்கான, நிதி ஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்ற அனுமதி கோரினார். அப்போது குரல் ஓட்டெடுப்பு மூலம் நிதிமசோதா நிறைவேறியது.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News