நெடுஞ்சாலைத்துறையின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு .
The Forecast 3 years ago நெடுஞ்சாலைத்துறை
நெடுஞ்சாலைத்துறையின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் (24.3.2023) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
அமைச்சர் அவர்கள், ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றியபோது,
திருவையாறு புறவழிச்சாலையை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். தற்போது மழை இல்லாத காலத்தில் இப்பணியை மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்கள்.
சாலைப்பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். மேலும், கடந்த ஆண்டு மானியக் கோரிக்கையின்போது, அறிவிக்கப்பட்ட அறிவிப்புகன் செயல்படுத்தப்பட்ட விபரத்தினை ஆய்வு செய்து ஒவ்வொரு அலகாக அனைத்து தலைமைப் பொறியாளர்களிடம், கோடை காலத்தில் ஆறுகளின் குறுக்கே நிறைவேற்றப்பட வேண்டிய பாலப்பணிகளை உடனடியாக துவக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். நிலஎடுப்புப் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், நிலஎடுப்புப் பணிகள் முடித்த பின்னரே சாலைப்பணிகள் துவக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள சாலைப் பணிகளையும், மேம்பாலம், இரயில்வே மேம்பாலம் போன்றவற்றையும் அதிக கவனம் செலுத்தி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். அரசு நிதி ஒப்பளிப்பு வழங்கி நிர்வாக அனுமதி வழங்கியும் முடிக்கப்படாதப் பணிகளை குறிப்பாக ஆய்வு செய்தார்கள்.
இக்கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தலைமைப் பொறியாளர்கள் .பி.ஆர்.குமார், முதன்மை இயக்குநர், இரா.சந்திரசேகர், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, .ந.பாலமுருகன் தேசிய நெடுஞ்சாலை, .எம்.முருகேசன் திட்டங்கள், .இரா.கீதா, நபார்டு மற்றும் கிராமச் சாலைகள், .என்.சாந்தி, தமிழ்நாடு சாலைமேம்பாட்டு திட்டம்-II, திரு.இளங்கோ, திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு, .க.சேகர் பெருநகர், எம்.கே.செல்வன், சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.
0 Comments