500க்கும் மேற்பட்ட குழந்தைகள்.. 'சீரியல்' விந்தணு Doner ரை தேடும் காவல் துறை..
The Forecast 3 years ago உலக செய்திகள்
ஆம்ஸ்டர்டம்: நெதர்லாந்தில் 500 க்கும் குழந்தைகள் உருவாக விந்தணு தானம் செய்தவரை அந்நாட்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆனால் தலைமறைவாகியுள்ள இந்த நபர் வெளிநாடுகளில் பதுங்கி தொடர்ந்து விந்து தானம் செய்து வருகிறார்.
குழந்தையின்மைக்கு தீர்வாக வந்ததுதான் விந்தணு தானம். இப்போது வரை இந்த விந்தணு தானம் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாத நிலையில், நெதர்லாந்தில் 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சுமார் 550 குழந்தைகள் உருவாக விந்தணு தானம் செய்துள்ளார். இதன் மூலம் ஏராளமாக வருவாயும் ஈட்டியிருக்கிறார். சரிங்க இதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா? யோசித்து பாருங்கள் இந்த 550 குழந்தையும் ஒரே ஊரில் வளர்ந்து, ஒரே பள்ளியில் படித்து பின்னர் காதலில் விழுந்து திருமணம் செய்து கொண்டால்? இப்படி யோசித்தே பார்க்க முடியாத செயலை செய்தவர்தான் நெதர்லாந்தின் ஜொனாதன் ஜேக்கப் மெய்ஜர்.
ஜகஜால கில்லாடியான இந்த ஜொனாதன் ஜேக்கப் முதலில் விந்து தானம் கொடுத்த போது அதற்காக அவருக்கு சிறிதளவு பணமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் ஒரு பெரிய ப்ளானை போட்டிருக்கிறார். அதன்படி சமூக வலைத்தளங்கள் மூலம் அவர் குழந்தை இல்லாத தம்பதியினை தேடியிருக்கிறார். அவர்களிடம் தான் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்
அதன் பின்னர் தான் விந்தணு தானம் செய்ய உள்ளதாக கூறி தானத்தை தொடங்கி இருக்கிறார். இப்படியாக சுமார் 13 கிளினிக்குகளில் விந்தணு தானம் செய்திருக்கிறார். இதில் 11 கிளினிக்குகள் நெதர்லாந்தில் இருக்கின்றன. இந்நாட்டின் சட்டத்தின்படி 12 பெண்களுக்கு மேல் எந்த ஆண்களுக்கும் விந்துணு தானம் செய்யக் கூடாது. அதாவது விந்தணு தானம் செய்பவர் அதிகப்பட்சமாக 25 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கலாம். ஆனால் ஜேக்கப் 550 குழந்தைகளை உருவாக்கியிருக்கிறார். இப்படியாக 551வது குழந்தையை உருவாக்க விந்தணு தானம் செய்ய முயன்றபோது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
வழக்கு
இதனையடுத்து இவர் மீது DonorKind எனும் அறக்கட்டளை வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில், "இந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு மாறாக இவர் விந்தணுவை தானம் செய்திருக்கிறார். இது மிகப்பெரிய உளவியல் சிக்கலை ஏற்படுத்தும். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள் எனில் அவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தும். இவருக்கு எதிராக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவேதான் நாங்கள் வழக்கு தொடுத்திருக்கிறோம்" என்று அறக்கட்டளை கூறியுள்ளது. அதேபோல பெண்மணி ஒருவர் கூறுகையில், "எங்களுக்கு நீண்ட ஆண்டுகளாக குழந்தை இல்லை. எனவே நாங்கள் ஏக்கத்தில் இருந்தோம்.
விந்தணு தானம்
அப்போதுதான் ஜேக்கப் பழக்கமானார். சிலநாட்கள் எங்களுடன் அவர் நண்பராக பழகினார். பின்னர் எங்களுக்கு இருந்த பிரச்னையை அறிந்துக்கொண்டு விந்தணு தானம் கொடுக்க முன்வந்தார். நாங்களும் இதனை ஏற்றுக்கொண்டோம். தற்போது எங்களுக்கு ஓர் குழந்தை இருக்கிறது. ஆனால் அதன் பின்னர்தான் தெரிந்தது இவர் பல்வேறு இடங்களில் இப்படி அட்டன்டென்ஸ் போட்டிருக்கிறார் என்பது. எனவே இது தொடர்பாக நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள உதவிய DonorKind எனும் அறக்கட்டளையை அணுகினோம். அவர்கள் ஜேக்கப் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். ஜேக்கப்புக்கு ஏற்கெனவே நுற்றுக்கணக்கான குழந்தைகள் இருப்பது தெரிய வந்திருந்தால் நாங்கள் அவரின் விந்தணுக்களை பெற்றுக்கொள்ள சம்மதித்திருக்க மாட்டோம்" என்று கூறியுள்ளார்.
நெதர்லாந்தில் ஜேக்கப்பை தேடப்படும் குற்றவாளியாக அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது. ஆனால், இவர் வெளிநாடுகளில் தங்கி உக்ரைன், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுக்கு விந்தணு தானம் தொடர்ந்து செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆன்லைன் மூலம் சர்வதேச அளவில் அவர் இதனை வியாபாரமாக நடத்தி வருவதாகவும் இதனை தடுக்க ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர வேண்டும் எனவும் நெதர்லாந்து காவல்துறையினர் கூறியுள்ளனர்.
0 Comments