Loading . . .




சென்னை பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் 

நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணா நகர் மண்டலம், செனாய் நகர் பகுதியில் ரூபாய் 12.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 100 படுக்கைகளுடன்  கூடிய  நகர்ப்புர சமுதாய  சுகாதார மைய கட்டடத்தினை  தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த நகர்ப்புர சமுதாய சுகாதார மைய கட்டடம் தரைத்தளம் மற்றும் அதன் மேல் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது அதன் கீழ் தளத்தில் நோயாளிகள் காத்திருப்பு அறை, மருத்துவ அலுவலர் அறை, பணியில் உள்ள செவிலியர்களுக்கான அறை, எக்ஸ்ரே அறை, ஆய்வக வசதி, மின் வசதி, கழிப்பட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதல் தளத்தில் பெண்களுக்கான அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய அறை, நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு முன் தயார்படுத்தும் அறை, நோயாளிகள் மருத்துவ கவனிப்பிரிவு  அறை, இரண்டு அறுவை சிகிச்சை  அரங்குகள், கழிப்பிட வசதி அமைந்துள்ளன.

இரண்டாம் தளத்தில், காத்திருப்பு அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆண்களுக்கான அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய அறை,  கழிப்பிட வசதி அமைந்துள்ளன.  மூன்றாம் தளத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மருத்துவப் பிரிவு, காத்திருப்பு அறை குழந்தைகளுக்கான சிகிச்சைப்  பிரிவு, கழிப்பிட வசதி அமைந்துள்ளன.

நான்காம் தளத்தில் கருத்தரங்க அறை,  டயாலிசிஸ் சிகிச்சை மையம், மருத்துவர்கள் உணவருந்தும் கூடம், பொருட்கள் வைப்பறை, துணிகள் துவைக்கும் அறை, கழிப்பிட வசதி என மொத்தம் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் இந்த கட்டடம் கட்டப்பட்டு உள்பகுதியில் உள்ள பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கட்டத்தில் தீத்தடுப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

 இதனைத் தொடர்ந்து, அம்பத்தூர் மண்டலம், டி சி எஸ் பூங்காவில் மரக்கன்றுகள் நடுதல், பொதுமக்களுக்குக்கான வசதிகளை மேம்படுத்துதல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட  மேம்பாட்டுப் பணிகளை தலைமைச் செயலாளர் அவர்கள்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர், திரு.வி.க.நகர் நகர் மண்டலம், கொளத்தூர் - வில்லிவாக்கம் எல்சி 1 சாலையில்

 ரூபாய் 61.98 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரயில்வே மேம்பாலப் பணியினையும், ரூபாய் 43.46 கோடி  மதிப்பில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே ஸ்டீபன்சன் சாலையில் கட்டப்பட்டு வரும் பாலப்பணிகளையும் தலைமைச் செயலாளர் அவர்கள்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 


தொடர்ந்து, இராயபுரம்  மண்டலம், பழைய வண்ணாரப்பேட்டைப்பகுதி, மணிகண்டன் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் " சிட்டீஸ்"  (CITIIS -- City Investment To Innovate Integrate and Sustain) திட்டத்தின் கீழ்  ரூபாய் 4.53 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள்,  சீர்மிகு வள வகுப்பறைகள்  (Smart Class Rooms)  உள்ளிட்டவற்றை  தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், திருவொற்றியூர் மண்டலம், எண்ணூர் விரைவுச் சாலையில், ரூபாய் 47.62 கோடி மதிப்பில்,  சிப்பம் 42  ல் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக   திருச்சினான்குப்பம் சந்திப்பு சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினையும்  (Precast drain at road crossing), மணலி விரைவுச் சாலையில், ரூபாய் 118.02 கோடி மதிப்பில்,  சிப்பம் 38  ல் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக   சடையன்குப்பம் நெடுஞ்சாலை,  சந்திப்பு ஜோதிநகர் சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினையும் தலைமைச் செயலாளர் அவர்கள்  நேரில்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, இராயபுரம்  மண்டலம், வார்டு 59,  சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில்  எஸ்.எம்.நகர் பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரத்தில் நட்டு வளர்க்கப்படும் மரக்கன்றுகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தலைமைச் செயலாளர் அவர்கள்  நேரில்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வகளின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் .ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் .ஐட்ரீம் மூர்த்தி அவர்கள் (இராயபுரம்),  .ஜோசப் சாமுவேல் அவர்கள் (அம்பத்தூர்),  நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி அவர்கள், கூடுதல் ஆணையாளர் (பொது சுகாதாரம்), இணை ஆணையர் (பணிகள்), துணை ஆணையாளர் (கல்வி),  வட்டார துணை ஆணையாளர்கள், தலைமைப் பொறியாளர்கள், மாநகர மருத்துவ அலுவலர், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News