குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு -அமைச்சர் .தா.மோ.அன்பரசன் அவர்கள்,அமைச்சர் .வி.செந்தில் பாலாஜி தலைமையில்
The Forecast 3 years ago தொழிலாளர் நலத்துறை
தலைமைச் செயலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் . அவர்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்/தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் . ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் .வி. அருண்ராய், இ.ஆ.ப., தமிழ்நாடு சிறு தொழில்வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சோ. மதுமதி, இ.ஆ.ப., மின்சார வாரிய தலைமை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் ராஜேஸ்வரி, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில்கள் சங்கத்தின் தலைவர் கே.மாரியப்பன்,பொதுச் செயலாளர் வி.நித்தியானந்தம், துணைத் தலைவர் .சுருளிவேல் மற்றும் தொழில் வணிக துறை கூடுதல் இயக்குநர் ஏகாம்பரம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments