Loading . . .




சென்னை கட்டிட விபத்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களை அமைச்சர்கள் கே.என்.நேரு ,பி.கே.சேகர் பாபு சந்தித்து சிகிச்சைகள் குறித்து ஆய்வு

The Forecast 3 years ago சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், பிராட்வே பகுதியில் உள்ள ஆர்மேனியன் தெருவில் கட்டிட விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணியின்போது காயம் அடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களை  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் .கே.என்.நேரு அவர்கள்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே.சேகர் பாபு ஆகியோர்  (19.4.2023) நேரில் சந்தித்து நலம் விசாரித்து வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து சிறந்த சிகிச்சை அளித்திட அறிவுறுத்தினர். உடன்,  மேயர்  ஆர். பிரியா அவர்கள்,  துணை மேயர் . மு.மகேஷ் குமார் அவர்கள், உட்பட பலர் உடன் இருந்தனர்.

0 Comments

Post your comment here

சென்னை Relateted News