வட்டிக்கு பணம் வாங்கித்தான் ஜெயிச்சோம் ஒன்றிய பணிகளில் கமிஷன் வேணும்: அதிமுக கவுன்சிலர் பகிரங்க பேச்சு
The Forecast 3 years ago உள்ளாட்சி செய்திகள்
திருப்பத்தூர் ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெறும் பணிகளில் கமிஷன் வழங்க வேண்டும் என்று அதிமுக கவுன்சிலர் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் ஒன்றிய குழு கூட்டம் நேற்று ஒன்றியக் குழு தலைவர் விஜயா அருணாச்சலம் தலைமையில் நடந்தது. அப்போது ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேசுகையில், ‘அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பணிகள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு எந்த ஒரு பணியும் வழங்கப்படவில்லை’ என்று குற்றம் சாட்டினர். பின்னர், அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் யுவராஜ் பேசுகையில்,ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பணிகளுக்கு டெண்டர் விடுத்தால் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் அனைத்து பணிகளுக்கும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு கமிஷன் வழங்கப்படுவதில்லை. எங்களுக்கு கமிஷன் வழங்க வேண்டும். நாங்கள் வட்டிக்கு பணம் வாங்கி தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளோம். எங்களை யாரும் மதிப்பதில்லை. இந்த பதவியை, கட்டிய மனைவி கூட மதிப்பதில்லை. எனவே எங்களுக்கு அனைத்து பணிகளிலும் கமிஷன் வழங்க வேண்டும்’ என்றார்.
0 Comments