Loading . . .




அதிமுக போலிப் பொதுக்குழு கலைப்பு: ஓ.பன்னீர்செல்வம்

The Forecast 3 years ago அதிமுக

அதிமுகவின் போலிப் பொதுக்குழு இன்று முதல் கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கட்சிப்

பொதுச்செயலாளர் அடிப்படை

உறுப்பினர்களால்தான்

தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்ஜிஆர் வகுத்த அடிப்படை விதிக்கு

முற்றிலும் முரணாகவும், கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

அப்பதவியிலிருந்து இயற்கை நியதிக்கு புறம்பாக நீக்கியும் கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலர் ஜெயலலிதாதான் என்ற வதியை மாற்றியும் அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும்

பொதுச்செயலாளராக வர முடியும் என்கின்ற அடிப்படை விதியை மாற்றி 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டக் கழச் செயலாளர்கள் வழிமொழிய

வேண்டும், ஐந்து ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகியாக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்தும், இவ்வாறு, கட்சி சட்டதிட்ட வதிகளின்

அடிப்படைக்கு நேர் விரோதமாக செயல்பட்டும் வந்த, நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய போலி பொதுக்குழு அறவே கலைக்கப்பட வேண்டும். என்றும், கட்சி உறுப்பினர்கள் மூலம் உண்மையான தேர்ந்தெடுக்கப் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு அமைக்கப்பட

வேண்டும்மென்றும் 24-04-2023 அன்று திருச்சியில் நடைபெற்ற கட்சி அடிப்படை உறுப்பினர்களின் மாநாடு கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பரிந்துரை செய்தது.

அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று, கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், நியமனம் செய்யப்பட்ட போலிப் பொதுக்குழு இன்று முதல் கலைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சி உறுப்பினர்கள் யாரும் அந்த போலி பொதுக்குழு உறுப்பினர்களோடு தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

புதிய பொதுக் குழு

தேர்ந்தெடுக்கப்படும் வகையில், உண்மையான கட்சி

உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்பதையும், அதன்பிறகு

முறையான, நேர்மையான தேர்தல்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதையும்

தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments

Post your comment here

அதிமுக Relateted News