Loading . . .




அமெரிக்காவாழ் இந்தியர் உலக வங்கி தலைவராக அஜய் பங்கா நியமனம்

The Forecast 2 years ago உலக செய்திகள்

உலக வங்கியின் அடுத்த தலைவராக, அமெரிக்காவாழ் இந்தியரான அஜய் பங்கா (வயது 63) நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக உலக வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'உலக வங்கியின் தலைவராக அஜய் பங்காவை உலக வங்கி நிர்வாக இயக்குனர்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். அவருடன் இணைந்து செயல்படுவதில் இயக்குனர்கள் குழு ஆர்வமாக உள்ளது. வருகிற ஜூன் 2-ந் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு உலக வங்கி தலைவர் பதவியை அஜய் பங்கா வகிப்பார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அரசால் அஜய் பங்கா முன்மொழியப்படுவார் என்று அதிபர் ஜோ பைடன் கடந்த பிப்ரவரியில் அறிவித்தார். இந்தியாவில் பிறந்து, படித்து, வளர்ந்த அஜய் பங்கா, மாஸ்டர்கார்டு நிறுவனத்தில் தலைவராக பதவி வகித்தவர். தற்போது அமெரிக்காவின் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத்தலைவராக பொறுப்பு வகிக்கிறார். அஜய் பங்காவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது.


0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News