அதிமுகவை மீட்டெடுக்க ஒன்றிணைந்துள்ளோம்” - சந்திப்புக்குப் பின் தினகரன், ஓபிஎஸ் தகவல்
The Forecast 3 years ago அதிமுக
உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்துகின்ற விதமாக, மீட்டெடுபதற்காக நானும் சகோதரர் ஓபிஎஸ்ஸும் இணைகிறோம்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, பன்னீர்செல்வத்துடன், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியது: "அதிமுகவை மீட்பதற்காக, ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் தனித்தனியாக செயல்பட்டனர். அந்த லட்சியத்தை அடைய சேர்ந்து செயல்படுவது என்று முடிவெடுத்திருக்கிறோம். எப்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து செயல்படுகிறார்களோ அதுபோல இணைந்து செயல்படுவோம்" என்றார்.
0 Comments