டி.டி.வி.தினகரனை தொடர்ந்து, சசிகலாவையும் விரைவில் சந்திப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: என்னை விமர்சிப்பவர்களுக்குப் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. சசிகலா, டி.டி.வி. தினகரனை எப்போது சந்திப்பீர்கள் என்று பலரும் என்னிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர். தற்போது டி.டி.வி. தினகரனை சந்தித்தேன். சசிகலா வெளியூரில் உள்ளதால் அவரைச் சந்திக்க முடியவில்லை. விரைவில் அவரையும் சந்திப்பேன் என்றார்.அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனை ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை சந்தித்தார். அதிமுகவை மீட்பதற்காக செயல்திட்ட அடிப்படையில் டி.டி.வி.தினகரனுடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
0 Comments