சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 273ஆவது குழுமக் கூட்டம்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு-வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா இ.ஆ.ப., முன்னிலையில்
The Forecast 3 years ago இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி (10.5.2023) சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான . அவர்கள் தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 273ஆவது குழுமக் கூட்டம் நடைபெற்றது.
இக்குழுமக் கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்த, தாம்பரம்-செங்கல்பட்டு புறநகர், இரயில் பாதையில் புதிய புறநகர் இரயில் நிறுத்தம் மற்றும் இரயில் நிறுத்தத்திலிருந்து பேருந்து முனையத்தை இணைப்பதற்கு நகரும் மேல்மட்ட நடைமேடை அமைப்பது சம்பந்தமாகவும், மாதவரம் பேருந்து மற்றும் சரக்குந்து வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நிதியளிப்பது சம்பந்தமாகவும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. அமைச்சர் அவர்களால் 2023-2024ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இக்குழுமக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் . ஆர்.பிரியா அவர்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (மாதவரம்) எஸ்.சுதர்சனம் அவர்கள், (திரு.வி.க.நகர்) பி.சிவக்குமார் என்கிற தாயகம் கவி அவர்கள், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் .அன்சூல் மிஸ்ரா இ.ஆ.ப., அவர்கள், நிதித்துறை கூடுதல் செயலாளர் .பிரசாந்த் மு,வடநெரே, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம. கோவிந்த ராவ், இ.ஆ.ப., அவர்கள், நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் பா. கணேசன், இ.ஆ.ப., அவர்கள், குழும உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments