Loading . . .




மெரினா கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதிமுக இடையீட்டு மனு

The Forecast 3 years ago அதிமுக

சென்னை மெரினா கடற்கரை கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரை அருகே கடலில் ரூ.81 கோடி செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கியுள்ளது.


0 Comments

Post your comment here

அதிமுக Relateted News