Loading . . .




இன்று அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்: அதிமுகவின் சட்டவிதி திருத்தங்கங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியீடு

The Forecast 3 years ago அதிமுக

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.

அதிமுக சட்டவிதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மத்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அதனுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் பங்கேற்க உள்ளனர்.

மக்களவைத் தேர்தல், அதிமுக உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்தல் உள்ளிட்டவை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: சென்னையில் 11.7.2022-இல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிட விரும்பும் உறுப்பினர் கட்சியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். தலைமைப் பொறுப்புகளில் குறைந்தது 5 ஆண்டுகள்

பணியாற்றியிருக்க வேண்டும். பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுபவரை தலா 10 மாவட்டச் செயலர்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் உள்ளிட்ட சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சட்டத்திருத்தங்களையும், அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையும் ஏற்கெனவே மத்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டது.

தற்போது முறைப்படி அதிமுகவின் சட்டவிதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஏற்கப்பட்டு, தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

0 Comments

Post your comment here

அதிமுக Relateted News