ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடுகள் மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு
The Forecast 2 years ago உலக செய்திகள்
அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா,தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், இ,ஆ,ப., தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மைஇயக்குநர் .வே.விஷ்ணு, இ.ஆ.ப., ஆகியோருடன்
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization – JETRO) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்திட வேண்டும் என்றும்
2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாங்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை மிகப் பெரிய அளவில் தமிழ்நாட்டில் - சென்னையில் நடத்திட திட்டமிட்டு இருக்கிறோம் என்றும்
உங்களை அந்த மாநாட்டிற்கு வரவேற்றிடவும், முதலீடுகளை பெருமளவில் எங்கள் மாநிலத்திற்கு அளித்திடவும் உங்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
ஜப்பான் - இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை திட்டத்தின்கீழ் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
2030-2031 நிதியாண்டிற்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான ஒரு இலட்சிய இலக்கினை நிர்ணயித்து, அந்தப் பாதையில் பயணித்து வருகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு துறை சார்ந்த முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தி, இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி ரூபாய் என்ற அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே 5,596 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4,244 நபர்களுக்குவேலை வாய்ப்பு என்ற வகையில், 5 ஜப்பானிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஜப்பானிய நிறுவனங்களுக்கு என்னுடைய சில கோரிக்கைகளை வைக்க விரும்புகிறேன்,ஜப்பானிய நிறுவனங்கள் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த துறைகளில் மட்டுமே முதலீடுகளை மேற்கொள்கின்றன. இந்நிலையை சற்றே விரிவுபடுத்தி, உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டங்களிலும் முதலீடு மேற்கொள்ள வருமாறு, இந்தத் தருணத்தில் உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது என்பது உங்களது உற்பத்தித் திட்டங்களை மேம்படுத்தவும் உதவிகரமாக அமையும்.புதிய தொழில் பூங்காக்களை நாங்கள் அமைத்து வருகிறோம். அதிலும் உங்களது மேலான முதலீடுகளை வரவேற்கிறோம்.
உங்களது தொழிற்சாலைகளை - எங்கள் மாநிலத்தில் அமைக்கும்போது அதுதொடர்பான தலைமை அலுவலகத்தையும் எங்கள் மாநிலத்திலேயே அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் இளைய சக்தியை வளமிக்கதாக நாங்கள் மாற்றிக் கொண்டிருக்கிறோம். 'நான் முதல்வன்' என்ற எனது கனவுத் திட்டத்தின் மூலமாக மாணவர்கள், இளைஞர்கள் அனைவரையும் பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பல்துறை வல்லுநர்களாக வளர்த்து வருகிறோம். பெண்களை தொழில்நுட்ப வல்லுநர்களாக உயர்த்தி வருகிறோம். எனவே, உங்களது நிறுவனங்களுக்கு மிகச்சிறந்த திறமைசாலிகள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2024 ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாபெரும் நிகழ்வுக்கு நீங்கள் அனைவரும் வர வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், Ehime Prefecture துணை ஆளுநர் திரு. ஹிடிகி தனாகா (Mr. Hideki Tanaka), சென்னையிலுள்ள ஜப்பான் நாட்டு துணைத் தூதர் மாசாயுகி டகா (Mr. Masayuki Taga), Mitsubishi Electric Corporation நிறுவனத்தின் செயல் அலுவலர் . யாசுமிச்சி டாசுனோக்கி (Mr. Yasumichi Tazunoki) மற்றும் சென்னை கிளை தலைவர் டகேசி ஹிரானோ (Mr. Takeshi Hirano), மிட்சுபா கார்பரேஷன் நிறுவனத்தின் மேலாண்மை அலுவலர் கோஜி மிசுனோ (Mr. Koji Mizuno), JGC Corporation நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. சியுசி ஒகாவா (Mr. Syuichi Ogawa), HIROTEC Corporation நிறுவனத்தின் இயக்குநர் யுகியோ நோபுடோ (Mr. Yukio Nobuto), Rengo Company Ltd., நிறுவன அலுவலர் . தோஷிநோபு சடா (Mr. Toshinobu Sada), MinebeaMitsumi Inc., நிறுவனத்தின் பொது மேலாளர் . ஷிகிரு சுகடா (Mr. Shigeru Tsukada), MURA Co. Ltd., நிறுவனத்தின் செயல் ஆலோசகர் நோபுரு கமாகுரா (Mr. Noboru Kamakura), Yamaha Motor Co. Ltd., நிறுவனத்தின் பொது மேலாளர் ரியுஜி கவாஷிமா (Mr. Riuji Kawashima), JETRO இயக்குநர் திரு. காரோ ஷிராஷி (Mr. Kaoru Shiraishi) மற்றும் சென்னை JETRO இயக்குநர் யுகிஹிடே நாஹயமா (Mr. Yukihide Nakayama) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments