உயர் நீதிமன்ற தடை நீங்கியதும் 4 ஆயிரம் பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் க.பொன்முடி உறுதி
The Forecast 3 years ago உயர் கல்வித்துறை
உயர் நீதிமன்ற தடை நீங்கிய பிறகு. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் பேராசிரியர்கள், அரசு கல்லூரிகளில் நியமனம் செய்யப்படுவர் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உறுதிபடத்தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மே 29-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சென்னையில் ராணி மேரி கல்லூரி, மாநிலக் கல்லூரியில் நடைபெற்று வரும் கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி செல்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1,07,299 இடங்கள் உள்ளன. அதற்கு 2,46,295 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. பொது கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கும். கடந்தாண்டை விட இந்த ஆண்டு 15 சதவீதம் அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசுக் கல்லூரிகளில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதால் மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பிக்கின்றனர்.
தமிழக அரசு கல்லூரிகளில் 4,000
பேராசிரியர் காலிப்பணியிடங்களை
நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நீதிமன்ற வழக்கு முடிந்து, தடை நீங்கியதும் ஜூன் முதல் வாரத்தில்
கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தால் மட்டும் போதாது; அதன்படி, அங்குள்ள ஆசிரியர்கள்,அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும். தரமும் உயரவேண்டும். அதற்காக கொண்டு வரப்பட்டதே 'நான் முதல்வன்' திட்டம். சிங்கப்பூர் சுற்றுப் பயணத்தின் போது இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
மாணவர்கள் இங்கு வந்தும், நமது மாணவர்கள் அங்கு சென்றும் கல்வித் தரத்தை அறிந்து கொள்ள முடியும். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மொழிப் பாடங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். அதுகுறித்தும், மாநில கல்விக் கொள்கை குறித்தும் விவாதிக்க துணைவேந்தர்கள், மண்டல இயக்குநர்கள், கல்லூரி முதல்வர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை (மே 31) நடைபெறவுள்ளது.
ஆளுநரின் கல்வி மாநாடு ஜூலை 5ஆம் தேதி உதகையில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வது அந்தந்த பல்கலைக்கழக துணைவேந்தர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றார் அவர்.
உயர்கல்வித் துறைச் செயலர் தா.கார்த்திகேயன், கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 Comments