Loading . . .




கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உயர்மட்ட குழுக் கூட்டம்

The Forecast 2 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உயர்மட்ட குழுக் கூட்டம்    நடைபெற்றது

தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில்   தலைமைச் செயலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதலுக்கான மாநில அளவிலான பொறுப்பாண்மைக் குழுக் கூட்டம், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்திற்கான மாநில கண்காணிப்புக் குழுக் கூட்டம் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கான உயர்மட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது, 

இக்கூட்டத்தில், தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதலிலும் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழித்தழிலும் தொழிலாளர் துறை மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு ஆகியவற்றில் தொழிலாளர் துறை எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டிய அரசின் தலைமைச் செயலர்,  குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்ககள் அதிகம் காணப்படும் வாய்ப்புள்ள தொழில்கள்/ தொழிற்சாலைகளைக் கண்டறிந்து பட்டியலிடவும், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல்  மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் ஆகியவற்றில் தொடர்புடைய துறைகள் மூலம் மீட்கப்பட்ட குழந்தை மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு  செயல்படுத்தப்படும் மறுவாழ்வு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தினார். 

 இக்கூட்டத்தில்,  அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர்  முகமது நசிமுத்தின். இ.ஆ.ப., , முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையர்  அதுல் ஆனந்த், இ.ஆ.ப., பல்வேறு துறைகளின் செயலர்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News