செங்கல்பட்டு மாவட்டம், ரூ.12.61,லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம்.
The Forecast 2 years ago செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றும் ஊராட்சி ஒன்றியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஐஐ 2021-2022-ல் சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மெய்யூர் பகுதியில் ரூ.12.61,லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் மு.பாபு அவர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் .ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். உடன் திருக்கழுக்குன்றம் ஒன்றிய பெருந்தலைவர் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம பொது ஆர்.டி.அரசு, -மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments