Loading . . .




அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி

The Forecast 2 years ago அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் . ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் 1432-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் ஜெயங்கொண்டம் வட்டத்திற்கான இரண்டாம் நாள் ஜமாபந்தி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  (14.06.2023) நடைபெற்றது.

இதில், 1432-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் இரண்டாம் சுத்தமல்லி உள்வட்டத்திற்குட்பட்ட மணகெதி, உல்லியக்குடி, வெண்மான்கொண்டான் (மேல்பாகம்), வெண்மான்கொண்டன் (கீழ்பாகம்), பருக்கல் (மேல்பாகம்), பருக்கல் (கீழ்பாகம்), கோவிந்தபுத்தூர், நடுவலூர் (மேல்பாகம்), நடுவலூர் (கீழ்பாகம்), சுத்தமல்லி, கீழநத்தம், அம்பாபூர், உடையவர்தீயனூர், கடம்பூர், சாத்தம்பாடி, ஸ்ரீபுரந்தான் (வடபாகம்), ஸ்ரீபுரந்தான் (தென்பாகம்) ஆகிய 17 கிராம பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 208 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 46 மனுக்களுக்கு உடனடி தீர்வு தீர்வு காணப்பட்டு, இவர்களுக்கு இன்றைய தினமே பட்டா மாறுதலுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், மீதமுள்ள 162 மனுக்கள் விசாரணையில் உள்ளது. இம்மனுக்களை உரிய விசாரணை செய்து தீர்வுகாணவும், கிராம கணக்குகளை முறையாக பராமரிக்கவும், நிலஅளவை அலுவலர் பயன்படுத்தும் கருவிகளை பார்வையிட்டு, உரிய முறையில் பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நாளில்ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும், ஜெயங்கொண்டம் வட்டத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 15.06.2023 அன்று குண்டவெளி உள்வட்டத்திற்குட்பட்ட பாப்பாகுடி (வடபாகம்), பாப்பாகுடி (தென்பாகம்), தர்மசமுத்திரம், வங்குடி, இளையபெருமாள்நல்லூர், குண்டவெளி (மேல்பாகம்), குண்டவெளி (கீழ்பாகம்), முத்துசேர்வாமடம், காட்டகரம் (வடக்கு), குருவாலப்பர்கோவில் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறும். காட்டகரம் (தெற்கு), குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரக மேலாளர் (பொது) குமரையா, வட்டாட்சியர் துரை, துணை வட்டாட்சியர்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

அரியலூர் Relateted News