Loading . . .




மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

The Forecast 2 years ago டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப.

சென்னையில் சாலைகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர்

ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும்  (ஜூன்19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னையில் பெய்துவரும் கனமழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை சாலைகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேங்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைநீர் வடிகாலில் தண்ணீர் செல்வதை மண்டலம் வாரியாக குழுக்கம் அமைத்து கண்காணிக்க வேண்டும்.

சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய தனி கவனம் செலுத்த வேண்டும்.

சாலைகளில் முறிந்து விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த உபகரணங்களுடன் குழுக்களை தயார் நிலையில வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

0 Comments

Post your comment here

டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. Relateted News