Loading . . .




சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு தங்குமிட வசதி:தலைமைச் செயலர் முனைவர் வே. இறையன்பு இ.ஆ.ப., அறிவுறுத்தல்

The Forecast 2 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையை தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, வீட்டுவசதித் துறை செயலர் அபூர்வா இ.ஆ.ப. க்கு அவர் எழுதியுள்ள கடிதம்:

தமிழகத்தில் சுற்றுலாத் துறையானது வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் தங்களுடைய மனஅழுத்தம், பரபரப்பான வாழ்க்கை நடைமுறையில் இருந்து விடுபட்டு தங்களது விடுமுறையைக் கழிக்க விரும்புகின்றனர். பல சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களையே பயணத்துக்கு பயன்படுத்துகின்றனர்.

இந்த வாகனங்களை .

இயக்க ஓட்டுநர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்

சுற்றுலாத் தலங்களுக்கு வாகனங்களில் செல்வோர், அவர்கள் தங்குவதற்கு ஹோட்டல்கள், விடுதிகளில் வசதியான அறைகளை பதிவு செய்து கொள்கின்றனர். ஆனால், வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களை தவிக்க விட்டு விடுகின்றனர். ஹோட்டல்கள் அல்லது விடுதிகளின் வரண்டாக்கள் அல்லது வாகனங்களிலேயே ஓட்டுநர்கள் தூங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஓட்டுநர்களுக்கு ஏற்படுகின்றன. இதன் விளைவாக, பல சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, அனைத்து ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் வாகன ஓட்டுநர்கள் தூங்குவதற்காக பார்மெட்ரி போன்ற அறைகளை வழங்க வேண்டும். இதற்கான குறைந்தபட்ச கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும். சுற்றுலா தலங்களில் உள்ள லாட்ஜ்கள் மற்றும் ஹோட்டல்களைக் கட்டும் போதே திட்ட அனுமதியில் இந்த பார்மெட்ரி வசதிகளைச் சேர்க்க விண்ணப்பதாரர்களை அறிவுறுத்த வேண்டும்.

இதன்மூலம், மிகப்பெரிய அளவிலான சாலை விபத்துகளைத் தவிர்ப்பதுடன், மனிதநேய அளவில் ஓட்டுநர்களுக்கு உதவிட முடியும். இதற்கான அறை வாடகைக் கட்டணத்தை வாகன நிறுத்துமிட கட்டணத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்.

ஓட்டுநர்களின் நலன்களையும், சாலை பாதுகாப்பையும் முன்வைக்கும் முயற்சியை தொடங்கினால் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திடும் என்று தனது கடிதத்தில் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News