Loading . . .




தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் கூட்டணி முடிவு: ஓ.பன்னீர்செல்வம்

The Forecast 2 years ago அதிமுக

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்ம், நான், ஆதரவு தராவிட்டால் பழனிசாமி அரச கவிழ்ந்திருக்கும்.

ஜெயலலிதா கொண்டுவந்த அரசு கவிழ்ந்து விடக்கூடாது என்பதால் ஆதரித்தேன்.

நான் நினைத்திருந்தால் அப்போதே இபிஎஸ் அரசு முடிந்திருக்கும் என்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். பாஜக தலைவர்கள் எங்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமியுடன் பொறுமை காத்து ஒன்றாக இருந்தோம். இனி தொண்டர்களின் விருப்பப்படியே எங்களது செயல்பாடுகள் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Post your comment here

அதிமுக Relateted News