ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உள்பட 4 நாடுகளுக்கு நிரந்தர இடம்: பிரிட்டன் வலியுறுத்தல்
The Forecast 2 years ago உலக செய்திகள்
உலகின் சக்திவாய்ந்த ஐ.நா.
பாதுகாப்பு கவுன்சிலில்
இந்தியா, பிரேசில், ஜெர்மனி,
ஜப்பான் மற்றும் ஆப்பிரிக்க
பிரதிநிதி நாட்டை நிரந்தர
உறுப்பினர்களாக இணைக்கும்
வகையில் கவுன்சிலை
விரிவுபடுத்த வேண்டியது
அவசியம் என்று பிரிட்டன்
வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு
ஜூலை மாதத்தில் தலைமைப்
பொறுப்பை பிரிட்டன்
ஏற்றிருக்கும் நிலையில்,
இந்த வலியுறுத்தலை
முன்வைத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்
நகரில் அமைந்துள்ள ஐ.நா.
தலைமை அலுவலகத்தில்
நடைபெற்ற பாதுகாப்பு
கவுன்சிலின் இந்த
மாதத்துக்கான திட்டப் பணிகள்
குறித்த ஆலோசனைக்
கூட்டத்துக்கு தலைமை வகித்த
ஐ.நா.வுக்கான பிரிட்டன் தூதர்
பார்பரா உட்வர்ட் பேசியதாவது:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்
இந்தியா, பிரேசில்,
ஜெர்மனி, ஜப்பான் மற்றும்
ஆப்பிரிக்க பிரதிநிதி நாட்டை
நிரந்தர உறுப்பினர்களாக
இணைக்கும் வகையில்
கவுன்சிலை விரிவுபடுத்தி
சீர்திருத்தம் மேற்கொள்வது
மிக முக்கியமானதாகும்.
கவுன்சிலுக்கு பிரிட்டன்
தலைமையேற்றிருக்கும்
நிலையில், இந்த முயற்சியில்
முதல் படியை பிரிட்டன் எடுத்து
வைத்துள்ளது என்றார்.
பிரிட்டனின் இந்த
வலியுறுத்தலுக்கு பின்னணியில்
உள்ள காரணம் குறித்த
செய்தியாளர்களின் கேள்விக்கு
பதிலளித்த உட்வர்ட், 'இந்திய
மற்றும் பிரேசிலை நிரந்தர
உறுப்னர்களாக ஆக்குவதன்
மூலமாக, பாதுகாப்பு
கவுன்சிலில் விரிவான
புவியியல் பிரதிநிதித்துவத்தை
உறுதிப்படுத்த முடியும்.
அதோடு, கவுன்சிலில் புவிசார்
சமநிலையை உருவாக்க
வேண்டும் என்பதும் முக்கிய
நோக்கம்' என்றார்.
21-ஆம் நூற்றாண்டின் புவிசார்
அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப,
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்
சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட
வேண்டும் என இந்தியாவும்
தொடர்ந்து வலியுறுத்தி வருவது
குறிப்பிடத்தக்கது.
0 Comments