போட்டி ஓ.கே.! ஆனால் மோசடி கூடாது: மெட்டா மீது வழக்கு தொடரப்போவதாக டுவிட்டர் மிரட்டல்
The Forecast 2 years ago உலக செய்திகள்
உலகின் முன்னணி இணையதள சமூக வலைதளமாக விளங்கும் டுவிட்டர் நிறுவனத்திற்கு மிகப்பெரும் போட்டியாக 'திரெட்ஸ்' எனும் வலைதளம் துவங்கப்பட்டுள்ளது. துவங்கிய சிறிது நேரத்திலேயே, அதாவது 7 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் அதனுடன் தங்களை இணைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'திரெட்ஸ்' செயலியின் வடிவமைப்பு அம்சங்கள் குறித்து ஒரு பயனர் அது டுவிட்டரின் பிரதி என்று பதிவிட்டிருந்தார். அதனை ஆமோதிப்பதுபோல், எலான் மஸ்க் ஒரு சிரிக்கும் முக எமோடிகான் பதிவிட்டிருந்தார். தற்போது 3 கோடிக்கும் அதிகமான பயனர்களை பெற்றுள்ள நிலையில், டுவிட்டரின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கை எதிர்நோக்குகிறது.
0 Comments