Loading . . .




உலகை சிறப்பாக கையாள உறுதியளித்த AI robots

The Forecast 3 years ago உலக செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ -AI) திறன் கொண்ட ரோபோக்கள் தங்களால் இந்த உலகத்தை மனிதர்களைவிட சிறப்பாக வழிநடத்த இயலும் என்று உறுதியளித்தன. அதே வேளையில் தங்களுக்கு மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை என்றும் ஒப்புக் கொண்டன.

தங்களைப் போன்ற ஏஐ ரோபோக்களை உருவாக்கும்போது மனிதர்கள் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளை அறிந்து கவனமாகக் கையாள வேண்டும் என்றும் எச்சரித்தன. நாங்கள் மனிதர்களின் வேலை வாய்ப்புகளைத் திருட மாட்டோம், மனிதர்களுக்கு எதிராக போராட மாட்டோம் என்றன.

ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடந்த 'சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு' என்ற உச்சி மாநாட்டில் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஹியூமனாய்ட் ரோபோக்கள் இடம் பெற்றிருந்தன. செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற 3,000 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் செயற்கை நுண்ணறிவின் சக்தியை கடிவாளமிட்டு அதனை காலநிலை மாற்றம், பசி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்தனர். இந்த உச்சி மாநாட்டை உலகமே உற்று நோக்கியது.

இந்நிலையில் மாநாட்டின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு கொண்ட ஹியூமனாய்ட் சோசியல் ரோபோக்களின் முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்புக்காக அவை அணிவகுக்கப்பட்டிருந்தன. அப்போது அறையில் நிலவிய நிசப்தத்தைக் கணித்த ஒரு ரோபோ.. "என்ன ஒரு பதற்றத்துடன் கூடிய நிசப்தம்" என்று வினவியது. இது அங்கு குழுமியிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News