Loading . . .




மணிப்பூர் வன்முறை ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம்: இந்தியா கடும் கண்டனம்

The Forecast 2 years ago உலக செய்திகள்

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியதற்கு இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்டீஸ் சமூகத்தினருக்கு இடையிலான மோதலில் 150க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ள நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றம் மணிப்பூர் வன்முறை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ‘காலனித்துவ மனநிலையின் பிரதிபலிப்பு’ என்று கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘ இந்திய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஐரோப்பிய நாடாளுமன்றம் தனது நேரத்தை அதன் உள் பிரச்னைகளில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும்’ என்று கூறியுள்ளார்

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News