கூகுளுக்கு ரூ.1,338 கோடி அபராத வழக்கு:அக். 10-க்கு விசாரணை ஒத்திவைப்பு
The Forecast 2 years ago உலக செய்திகள்
முறையற்ற வர்த்தக
நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக விதிக்கப்பட்ட ரூ.1,337.76 கோடி அபராதத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை அக்டோபர் 10-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஆண்ட்ராய்டு
இயங்குதளத்தில் செயல்படும். அறிதிறன்பேசிகளில் குறிப்பிட்ட செயலிகளை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து வைப்பது, அவற்றை அறிதிறன்பேசியில் இருந்து நீக்குவதற்கான
வசதிகளைப் பயனர்களுக்கு வழங்காமல் இருப்பது, 'பிளே ஸ்டோர்' தவிர இதர மூன்றாம் தரப்பு செயலி மையங்களுக்கு அனுமதி அளிக்காதது உள்ளிட்ட முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதற்காக கூகுள் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.1,337.76 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
கூகுளின் இந்த நடவடிக்கைகளால் மற்ற நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி இந்திய தொழிற்போட்டி ஆணையம் (சிசிஐ) அந்த அபராதத்தை விதித்தது. அதற்கு எதிராக தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (என்சிஎல்ஏடி) கூகுள் முறையிட்டது. அதை விசாரித்த என்சிஎல்ஏடி. கூகுளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை உறுதி செய்தது. மேலும், மூன்றாம் தரப்பு செயலி மையங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற சிசிஐ-யின் சில உத்தரவுகளை என்சிஎல்ஏடி ரத்து செய்தது.
அதையடுத்து, இந்த .
விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமென அந்நிறுவனம் சார்பில் கோரப்பட்டது. அதே வேளையில், மூன்றாம் தரப்பு செயலி மையங்களுக்கு கூகுள் அனுமதி அளிக்கத் தேவையில்லை என்ற என்சிஎல்ஏடி-யின் உத்தரவுக்கு எதிராக சிசிஐ சார்பிலும்
உச்சநீதிமன்றத்தில் தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது
அந்த மனுக்களைத் தலைமை வெள்ளிக்கிழமை தேவைப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு மனுதாரர்
நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு
விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தை விரிவாக விசாரிப்பதற்கு கூடுதல் காலஅவகாசம்
தரப்பு மூத்த வழக்குரைஞரான ஹரீஷ் சால்வேவும் ஒப்புதல் தெரிவித்தார்.
இருதரப்பும் தங்களது கோரிக்கைகள் குறித்த முழு விவரங்களையும் அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் இருதரப்பும் தாக்கல் செய்யும் அறிக்கைகளைக் கொண்டு பொதுவான மனுவைத் தயாரிப்பதற்காக வழக்குரைஞர் சமீர் பன்சாலையும் நீதிபதிகள் நியமித்தனர்.
0 Comments