சொத்து வரி சுய விவரப் படிவம் தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம்: சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம்
The Forecast 2 years ago சென்னை
சொத்து வரி சுய விவரப் படிவம் தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்க அனுமதி அளிக்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் மாதந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (ஜூலை 28) நடைபெற்றது. இதில், 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், முக்கியத் தீர்மானங்கள் விவரம்:
சென்னை மாநகராட்சி மேயருக்கு 30,000; துணை மேயருக்கு 15,000; கவுன்சிலர்களுக்கு 10,000 ரூபாய் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்குவதை நடைமுறைப்படுத்த அனுமதி.
* சிந்தாதிரிப்பேட்டை அருணாச்சலம் சாலையில் உள்ள, மே தின விளையாட்டு மைதானம் மற்றும் அண்ணாநகர் மண்டலத்தில் சலவைக்கூடம், விளையாட்டு மைதானம், சமுதாயநலக்கூடம் ஆகியவற்றை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேம்படுத்த அனுமதி.
0 Comments