Loading . . .




மதுரையில் மருத்துவமனை தொடங்க ரூ.6 கோடி தந்த வெளிநாட்டவர்.

The Forecast 2 years ago மதுரை

மதுரை நத்தம் சாலை அருகே சரந்தாங்கியில் உள்ளது சிவானந்த ஆசிரமம். இங்கு இயற்கை மருத்துவம் சார்ந்த யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சியை வெளிநாட்டினர் உள்ளிட்ட பலரும் பெற்று வருகின்றனர்.

இப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தினருக்கு ஆசிரமம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ஆசிரம வளாகம் முழுவதும் பசுமை வளாகமாகப் பராமரிக்கப்படுகிறது. இந்த ஆசிரம வளாகத்தில் புதிய 2 மாடிக் கட்டிடத்தில் இலவச மருத்துவமனை நேற்று திறக்கப்பட்டது. மதுரை ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா திறந்து வைந்தார்

இதில் சோழவந்தான் எம்எல்ஏ. ஆ.வெங்கடேசன், திமுக பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், சரங்தாங்கி ஊராட்சித் தலைவர் விஜயலட்சுமி, அலங்காநல்லூர் பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். இந்த மருத்துவமனையில் அறுவைசிகிச்சை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன

ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் சிகிச்சை முழுவதும் இலவசம். கட்டிடம், 2 ஆண்டுகளுக்கு சிகிச்சை, மருத்துவப் பணியாளர்கள் ஊதியம் என அனைத்துச் செலவுகளையும் ஏழை மக்களுக்காக வெளிநாட்டு பிரமுகர் ஒருவர் ஏற்றுள்ளார். இதற்காக அவர் ரூ.6 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்

0 Comments

Post your comment here

மதுரை Relateted News