Loading . . .




பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

The Forecast 2 years ago அதிமுக

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் குறித்து பாஜக மேலிடத்தில் புகாரளித்துள்ளோம். பல முறை எச்சரித்தும் அண்ணாமலை அலட்சியப்படுத்துகிறார். பாஜகவுடன் தற்போது அதிமுக கூட்டணியில் இல்லை. இது தான் அதிமுக கட்சி நிலைப்பாடு. கூட்டணி முறிவால் அதிமுகவுக்கு இழப்பு எதுவும் இல்லை. தனித்து நின்றால் நோட்டாவை கூட தாண்ட முடியாதவர் அண்ணாமலை. அதிமுகவுக்குள் ஒரு குழப்பமும் இல்லை. தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.

0 Comments

Post your comment here

அதிமுக Relateted News