Loading . . .




இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் பேட்டி

The Forecast 2 years ago உலக செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான யுத்தத்தில் சுமார் 18,000 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இதில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்கு ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தற்போது ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் இஸ்ரேலில் சிக்கிய 18,000 இந்தியர்களை மிகவும் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாகவே பார்க்கிறோம். சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கடைபிடிக்க ஒரு உலகளாவிய கடமை உள்ளது. பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை அதன் அனைத்து வடிவங்களிலும் மற்றும் வெளிப்பாடுகளிலும் எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய பொறுப்பும் உள்ளது.

இஸ்ரேலில் இதுவரை எந்த ஒரு இந்தியரும் உயிரிழந்ததாக தகவல் வரவில்லை. இஸ்ரேலில் இதுவரை 18,000 இந்தியர்கள் உள்ளனர். ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கான முதல் சிறப்பு விமானம் இன்று இரவு டெல் அவிவ் சென்றடையும். இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 230 பேருடன் முதல் விமானம் நாளை காலை இந்தியா வருகிறது. சிறப்பு விமானத்தில் சுமார் 230 இந்தியர்கள் வரை டெல்லி வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இஸ்ரேலில் காயமடைந்த ஒரு இந்தியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை தேறி வருகிறார் எனவும் கூறினார்.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News