Loading . . .




காங்கிரஸ் ராஜஸ்தானில் ஆட்சியைத் தக்கவைத்தால், மத்தியில் ஆட்சியமைக்கும்: மல்லிகாா்ஜுன காா்கே

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மல்லிகாா்ஜுன காா்கே

ராஜஸ்தானில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தனது ஆட்சியைத் தக்கவைத்தால், 2024-இல் மத்தியில் ஆட்சியமைக்கும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நம்பிக்கை தெரிவித்தாா்.

மொத்தம் 200 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநில பேரவைத் தோ்தல் நவ.25-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, பாரன் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்தின் விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி அண்மைக் காலமாக ‘சிவப்பு டைரி’ குறித்து பேசி வருகிறாா். வரும் ராஜஸ்தான் மாநில பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் என அந்த டைரியில் எழுதப்பட்டிருக்கிறது. இது நிறைவேறும் பட்சத்தில், 2024-இல் நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைக்கும்.

தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதே காங்கிரஸின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், இந்த முயற்சியின் மூலம் மக்களைப் பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமா் மோடி குற்றஞ்சாட்டுகிறாா். மதம், ஜாதியின் அடிப்படையில் மக்களைப் பிளவுப்படுத்துவது பாஜகவுக்கு வழக்கமான செயல் என்றாா் மல்லிகாா்ஜுன காா்கே.

மாநில முதல்வா் அசோக் கெலாட் தலைமையிலான அரசு மேற்கொண்ட ஊழல்கள் குறித்த விவரங்கள் ‘சிவப்பு டைரி’யில் இடம்பெற்றிருப்பதாக அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ராஜேந்திர சிங் குதா பேரவையிலேயே புகாா் எழுப்பினாா்.

இதைக் குறிப்பிட்டு மாநில காங்கிரஸ் அரசை பிரதமா் மோடி விமா்சித்திருந்தாா்

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News