திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில், தமிழக பா.ஜ., தலைமை அலுவலகம் புதிதாக கட்டப்பட இருப்பதாக, அக்கட்சியின் மாநில துணை தலைவரும், புதிய அலுவலகங்கள் கட்டுவதற்கான குழுவின் தலைவருமான சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த, 2014ல் மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்தபின்,அக்கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா, நாடெங்கும் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும், சொந்தமாக அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுத்தார். அதற்காக மாநில அளவில் குழு அமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில், 38 மாவட்டங்களில் பா.ஜ.,வுக்கு சொந்த அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டு, 14 மாவட்ட அலுவலகங்கள்கட்டிதிறக்கப்பட்டுள்ளன.
சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயம், சிறிய இடமாக இருப்பதால்,புதிய அலுவலகத்துக்கு இடம் வாங்க, 2014 முதல் முயற்சி மேறகொண்டனர். குறைந்தது ஒரு ஏக்கரில் அலுவலகம் இருக்க வேண்டும். அப்போது தான் அடுத்த, 50 ஆண்டுகளுக்கு பயன்படுத்த கூடியதாக இருக்கும் என, பா.ஜ., தலைமை அறிவுறுத்தியது.
ஒரு ஏக்கர் அளவுக்கு சென்னை மாநகரில் இடம் கிடைக்காததால், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில், தமிழக பா.ஜ., தலைமை அலுவலகம் அமைய உள்ளது.
'விரைவில் பத்திரப் பதிவு'
சக்கரவர்த்தி கூறியதாவது:மூன்று மாவட்டங்களில், வரும் ஜனவரியில் பா.ஜ., அலுவலகம் திறக்கப்படும். ஐந்து மாவட்டங்களில் பணி நடந்து வருகிறது. மீதமுள்ள,16 மாவட்டங்களில் இடம் வாங்க முயற்சி நடந்து வருகிறது.தமிழக பா.ஜ., தலைமை அலுவலகம் சென்னீர்குப்பத்தில் அமைய உள்ளது. இதற்காக, ஒரு ஏக்கர் இடத்தை தேர்வு செய்துள்ளோம். விரைவில் பத்திரப்பதிவு நடக்க உள்ளது. பத்திரப்பதிவு முடிந்ததும் கட்டுமான பணி துவங்கும். நவீன வசதிகளுடன், தமிழக கட்டட பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய அலுவலகம் கட்டப்படும்' என்றார்.
0 Comments