பெண்கள் திருமண வயது மசோதா பார்லி., குழு அவகாசம் நீட்டிப்பு -
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
பெண்களுக்கான திருமண வயதை, 18ல் இருந்து, 21ஆக உயர்த்தும் மசோதா, 2021 டிசம்பரில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
இது கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டு துறைகளுக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலைக்குழு, ராஜ்யசபாவின் கீழ் செயல்படுகிறது. இந்த மசோதா குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய நிலைக் குழுவுக்கு ஏற்கனவே பலமுறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், 2024 ஜன., 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
0 Comments