Loading . . .




ககன்யானில் பெண் விமானிகளை பயன்படுத்த இஸ்ரோ திட்டம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான சோதனை முயற்சி நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று கூறியதாவது:

ககன்யான் திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள் அல்லது பெண் போர் விமானிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக அடுத்த ஆண்டு பெண் வடிவிலான மனித ரோபோட்டை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு சாத்தியமான பெண் விஞ்ஞானிகளை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் 2035க்குள் முழுமையாக செயல்படும் விண்வெளி நிலையத்தை அமைப்பதே இஸ்ரோவின் இலக்கு.இவ்வாறு அவர் கூறினார். 

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News