Loading . . .




தமிழக அதிகாரிக்கு ஒடிசாவில் முக்கியமான பதவி

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் வி.கார்த்திகேய பாண்டியன் இ. ஆ.ப.,

ஒடிசாவில் சக்திவாய்ந்த அதிகாரியாகக் கருதப்படும் தமிழர் வி.கார்த்திகேய பாண்டியன் இ. ஆ.ப., விருப்ப ஓய்வுக்குப் பிறகு மாநில அரசின் முக்கியப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன் இ. ஆ.ப., 2000 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் பெற்று ஒடிசா மாநிலப் பிரிவில் வேலையும் பெற்றார். ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தின் தர்மகர் சர் கலெக்டராக தனது பணியைத் தொடங்கினார். 2005 இல், அவர் மயூர்பஞ்ச் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2007ல் கஞ்சம் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். இந்த சமயங்களில், ஒடிசா மக்களிடையே அவரது பொதுப்பணிகள் பெரிதும் பேசப்பட்டன. இதற்குக் காரணம் அவர் சரளமாக ஓடியா பேசுவதும் மக்களுடன் பழகுவதும்தான்.

வி.கே.பாண்டியன் தனது பதவிக் காலத்தில் ஜனாதிபதியின் தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். சமீபத்தில் அரசு ஹெலிகாப்டரில் ஒடிசா முழுவதும் பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பிஜு மக்களவைத் தேர்தலில் ஜனதா தளத்துடன் இணைந்து போட்டியிடுவார் என்றும் ஒடிசா அரசியல் வட்டாரங்கள் கணித்துள்ளன.

இது தொடர்பாக பிஜு ஜனதா தள வட்டாரங்கள், "முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆலோசனையின்பேரிலேயே வி.கே.பாண்டியன் இ. ஆ.ப., விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். இதையடுத்து அவர் முழு நேர அரசியலில் ஈடுபடவிருக்கிறார். குறிப்பாக, கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்படுவதுடன், மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம்" என்கின்றன.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News