அமைச்சரவை ஒப்புதலின் அடிபடையில் 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் உரமானியத்துக்கு ரூ.1.75 லட்சம் கோடி ஒதுக்கியது மத்திய அரசு
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
இந்தியா பிரதமர் நரேந்தரா மோடி , இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இந்தியா இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்
2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் உரமானியத்துக்கு ரூ.1.75 லட்சம் கோடி கடந்த பிப்ரவரியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ரபி பருவ கால விவசாய பணிகளை மேற்கொள்ள ரூ.22,303 கோடி மதிப்பில் உரமானியம் அளிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ரபி பருவமான குளிர்காலத்தில் கோதுமை, பருப்பு, திணைகள், காய்கறிகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை விவசாயிகள் பயிரிடுவர். இது நாட்டின் உணவு தானிய விநியோகத்தில் கிட்டத்தட்ட பாதியளவுக்கு இருக்கும். இந்நிலையில் ரூ.22,303 கோடி மதிப்பிலான உரமானியத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
0 Comments