அமைச்சர் நிதின் கட்கரியை குறித்து நற்கருத்து கூறிய : தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே புனேவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை பாஜகவில் உண்மையைப் பேசும் ஒரே நபர், அமைச்சர் நிதின் கட்கரி மட்டும்தான்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல மகாராஷ்டிராவில் சிவசேனா என்ற ஒரே ஒரு கட்சிதான் இருக்கிறது. அதுவும் மறைந்த பால் தாக்கரேவால் உருவாக்கப்பட்டது. அவர் உயிருடன் இருக்கும்போதே உத்தவ் தாக்கரேயிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். தற்போது அதன் நகல்தான் உள்ளது. ஆனால், மக்களுக்கு தங்கத்துக்கும், வெண்கலத்துக்கும் இடையிலான வேறுபாடு நன்றாகவே தெரியும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
அமைச்சர் நிதின் கட்கரி ஒரு நேர்காணலின்போது உண்மையான சிவசேனா குறித்து கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தக் கருத்தை கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments