சீனவை " மஞ்சள் நதி " என புகழ்ந்த சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் காலமானார்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங்
லீ கெகியாங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் பிறந்த லீ கெகியாங் இளமையில் வறுமையில் உழன்றார். சீன கலாசார புரட்சிக் காலத்தில் அவர் தனது தந்தையுடன் விவசாய நிலங்களில் பாடுபட்டுக் கொண்டிருந்தார். தந்தை விவசாயம் தாண்டி அரசு வேலையும் செய்தார். இருப்பினும் வருமானம் போதாமல் வறுமையில் இருந்துள்ளனர். இந்தச் சூழலிலும் கெகியாங் கல்வியிலும் தேர்ந்தார். பின்னாளில் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார். பொருளாதாரத்தில் தேர்ந்த அவர் தாராளமயமக் கொள்கையின் ஆதரவாளர். பின்னர் சீன பிரதமராக பதவி வகித்தார்.
லீ கெகியாங் கடைசியாகக் கடந்த மார்ச் மாதம் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேசும்போது, "சர்வதேச சூழல் என்னவாக இருந்தாலும் சீனா எந்தத் தடைகளையும் சமாளித்து தனது பொருளாதாரத்தை விஸ்தரிக்கும். மஞ்சள் நதி என்றைக்கும் பின்னோக்கிப் பாயாது" என்று கூறியிருந்தார்.
0 Comments