தேசிய வேலைவாய்ப்பு விழாவில் 51,000-க்கும் அதிகமான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி
தேசிய வேலைவாய்ப்பு விழாவில் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு 51,000-க்கும் அதிகமான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. ரயில்வே அமைச்சகம், அஞ்சல் துறை, உள்துறை அமைச்சகம், வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்துள்ளவர்களுக்கான விழா நாடு முழுவதும் 37 இடங்களில் நடைபெற்றன.
எந்தவொரு நாட்டின் எந்தவொரு போட்டிப் பயனையும் முழுமையாக உணர இளைஞர்களின் சக்தி தேவை.இந்தியாவில் புதிய வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இளைஞர்களைத் தயார்படுத்தும் நோக்கில் திறன் மேம்பாடு மற்றும் கல்வியில் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வளர்ச்சியின் வேகம் ஒவ்வொரு துறையிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் சிறந்த சுற்றுலா கிராமமாக தோர்டோ கிராமம் விருது பெற்றுள்ளது. ஹொய்சாலா கோயில் வளாகம் மற்றும் சாந்தி நிகேதனுக்கு உலகப் பாரம்பரிய இடத்திற்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த வளர்ச்சிகள் மற்றும் அதிகரித்த சுற்றுலா, இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதேபோல், விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும் புதிய வழிகளை உருவாக்கி வருகின்றன. என காணொலிக் காட்சி வாயிலாக தேசிய வேலைவாய்ப்பு விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
0 Comments