கோரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் சிறிது காலத்துக்கு கடுமையான பணிகளை தவிர்க்க வேண்டும் : மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா
சமீப காலமாக நடக்கும் மாரடைப்பை தடுக்கும் வகையில், மக்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது , “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒரு விரிவான ஆய்வை நடத்தியது. கோரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், கடுமையாக உடற்பயிற்சி மற்றும் கடினமாக வேலை செய்வதை 2 ஆண்டுகளுக்கு தவிர்க்க வேண்டும் என அந்த ஆய்வு கூறுகிறது. இதன் மூலம் திடீர் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்” என்றார்.
0 Comments