Loading . . .




வணிக பயன்பாடு சிலிண்டர் திடீர் விலை உயர்வு.

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

இந்த மாதம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாததால். அதனை சரிசெய்ய , வணிக காஸ் சிலிண்டரின் விலையை ரூ.100 மேல்  உயர்த்தி உள்ளது. , டீக்கடை, ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலை அதிகரிக்கும் எனத் தெரிகிறது . உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர்களின் விலையை, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.


காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக காஸ் சிலிண்டர் விலையை, தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதால்  , வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து.   சிலிண்டர் விலையை குறைக்க வேண்டுமென எதிர்கட்சியினரும், பொதுமக்களும் ஒன்றிய மத்திய அரசை வலியுறுத்தினர்.

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு ரூ.200 குறைத்தது. கடந்த 2 மாதங்களாக, வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யாமல் அப்படியே வைத்து கொண்டனர். இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான (நவம்பர்) புதிய விலை பட்டியலை, இன்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

இதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. . ஆனால், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.100 க்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அதன் விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. 

இதுபற்றி எண்ணெய் நிறுவன அதிகாரி கூறுகையில், ‘உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால், வணிக காஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களிலும் இதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,’ என்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் டீக்கடை, ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. .

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News