Loading . . .




இனி பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே: அரசு உத்தரவு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் ஒலி மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் இந்த வருடமும் காலை ஒரு மணிநேரம், மாலை ஒரு மணிநேரம் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 வரும் 12-ம்தேதி தீபாவளி இதையொட்டி, இரண்டு நாட்கள் முன்பே பட்டாசு வெடிப்பது  வழக்கம்.

இந்நிலையில், வாகன பெருக்கம், தொழிற்சாலை அதிகரிப்பு போன்ற காரணங்களால், காற்றில் உள்ள மாசு அளவு அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன இந்நிலையில், தீபாவளியின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளில் உள்ள ரசாயனங்கள் காற்றில் கலப்பதால் காற்று மாசு அதிகரிக்கிறது. இதுதவிர, பட்டாசு புகை மூட்டமும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால், பட்டாசு வெடிக்க தடை விதிக்குமாறு பல்வேறு தரப்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இதையடுத்து, பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. அதன்படி, காலை6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை என 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News