சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனை இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்கிறது.
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
மேகாலயா, ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்யநாதனை மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் முன்மொழியப்பட்டது.
இதேபோல், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி சக்ரதாரி சரண் சிங்கை ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி ரிது பஹ்ரி உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
0 Comments